இயக்கத்தின் 85 வது மாத அறிக்கை (டிசம்பர் 2020)

இயக்க நண்பர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வணக்கம், 2016 சட்ட மன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் 'மது விலக்கு' குறித்தும், 2021 சட்ட மன்ற தேர்தல் பிரச்சார களத்தில் 'கிராம சபை' குறித்தும் அரசியல் கட்சிகளை பேச வைத்ததில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அழுத்தம் எவ்வளவு இருந்துள்ளது, இருந்து வருகிறது என்பது நீங்கள் அறிந்ததே! இப்பணிகளில் திறம்பட செயல்படுவதற்கு முதுகெலும்பாக இருப்பது உங்களின் நிதி பங்களிப்பு என்பதை மறுக்கவியலாது!


கால் சென்டர் அழைப்புகள்: 504


ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இயக்க உறுப்பினர்களுடன் உறுப்பினர் கூட்டம் நடைபெற்று, ஒன்றிய வாரியான பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது!


இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு நிதி உதவி அளித்து, தொடர்ந்து ஆதரித்து வரும் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி..


இயக்கத்தின் 85 வது மாத அறிக்கை (டிசம்பர் 2020) மற்றும் செயல்பாட்டு அறிக்கையை உங்களிடம் சமர்பிப்பதில் மகிழ்கிறோம்..


இயக்கத்திற்கு நன்கொடை அளிக்க: www.sattapanchayat.org/donate

உறுப்பினராக இணைய: http://bit.ly/2020spimember


_______________________________________________________________________________________________________


சட்ட பஞ்சாயத்து இயக்க செயல்பாடுகள் &

வரவு செலவு அறிக்கை

இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.

டிசம்பர்(2020) மாதத்திற்கான இயக்கத்தின் செயல்பாடுகள், வரவு-செலவுகள் குறித்தான அறிக்கையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இயக்க செயல்பாடுகள்

1. சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழா

2. தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சி

3. இலஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள்

4. ஆலோசனை முகாம்

5. இயக்க உதவி மையம்

6. இயக்க உறுப்பினர்கள் சந்திப்பு

7. ஊடகத்தில் நம் இயக்கம்

8. வரவு செலவு அறிக்கை


1. சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழா

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் எனும் கிராமத்தில் கடந்த டிசம்பர் 13, 2020 அன்று இயக்கத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இயக்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கொரோனா பெருந்தொற்று நாட்டையே உலுக்கி வரும் நிலையிலும் சமூகத்தின் வெவ்வேறு தேவைகளை தீர்க்க தொடர்ந்து உழைத்து வரும் நபர்களை பாராட்டி அவர்களின் சேவைகளுக்கு ஊக்கம் அளிக்கும் பொருட்டு இயக்கத்தின் ஆண்டுவிழாவில் கீழ்க்கண்ட நபர்களுக்கு கீழ்க்கண்ட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

· செங்கோல் விருது – ஆசிரியை திருமதி.தீபலட்சுமி

· இயக்க தூண்கள் விருது – திரு.சக்திவடிவேலன் & Dr.சுந்தரம்

· சமூக நட்சத்திர விருது – திரு.ஹரிகிருஷ்ணன் & திரு.சாய் கிருஷ்ணன் (நிதர்சனம் அறக்கட்டளை)

· டாக்டர்.M.S.உதயமூர்த்தி விருது – Voice of People, Chennai & அறப்போர் இயக்கம்

· இயக்க வேர்கள் விருது – திரு.யுவராஜ், திரு.கோதண்டராமன், திரு.சாம் பொன்ராஜ் & திரு.சலீம் ஹாரிஸ்.

· இயக்க விழுதுகள் விருது – திரு.சுமன் ராஜ், திரு.அன்பழகன், திரு.நாகமுத்துராஜா & திரு.கங்காதுரை

மேலும், இயக்கத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டமும் வகுத்து ஆண்டுவிழாவில் அனைவரிடமும் முன்வைக்கப்பட்டது.

2.தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சி:

· உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு, “குழந்தை உரிமைகளுக்கான சட்ட வள ஆதார மையம்” நடத்திய தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சியில் இயக்கத்தின் சார்பில் தலைவர் சிவ.இளங்கோ அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்.

· நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்

சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சி நடைபெற்றது.


3. இலஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள்:

· நம் இயக்க உறுப்பினரின் வீட்டு மின் இணைப்பிற்கு பத்தாயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்ட சோளிங்கநல்லூர் மின்வாரிய உதவி பொறியாளர் மீது புகாரளிக்க நம் உறுப்பினர் முன்வந்ததன் அவருக்கு தேவையான உதவிகள் செய்து இலஞ்ச ஒழிப்பு துறையிடம் முறையான புகாரளிக்கபட்டது. நம் இயக்க உறுப்பினரின் புகாரின் பேரில் இலஞ்சம் கேட்ட அதிகாரியை இலஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மின்வாரிய அலுவலகத்திலேயே கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், நம் இயக்க உறுப்பினரின் வீட்டிற்கும் மின் இணைப்பு உடனடியாக இலஞ்சம் ஏதுமின்றி கொடுக்கப்பட்டது.

· விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நம் இயக்க உறுப்பினரின் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஐம்பது ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்டு மின் இணைப்பு தருவதை தாமதப்படுத்திய உதவி மின் பொறியாளர் மீது நம் இயக்க உறுப்பினர் புகாரளிக்க முன்வந்ததன் பேரில் அவருக்கு தேவையான உதவிகள் அளித்து அந்த மின்வாரிய உதவி பொறியாளர் மீது புகாரளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட உயரதிகாரிகள் நம் உறுப்பினரின் விவசாய நிலத்திற்கு சட்ட ரீதியாக அரசிற்கு கட்ட வேண்டிய பணத்தை தவிர வேறெந்த வகையிலும் பணம் பெறாமல் மின் இணைப்பு கொடுத்து சென்றுள்ளனர்.


4. ஆலோசனை முகாம்:

அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை மேம்பாலம் கட்டுவதற்காக அரசு கையகப்படுத்தி வருவதாகவும் அவ்வாறு கையகப்படுத்தும் போது நில உரிமையாளர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து அந்த கிராம மக்கள் நம் இயக்கத்திடம் தெளிவான விளக்கம் கேட்டதன் அடிப்படையில் அவர்களுக்கு தற்போதுள்ள சட்ட நிலையும் நில உரிமையாளர்களுக்கு சட்ட ரீதியாக உள்ள உரிமைகளையும் எடுத்துரைத்து கோரப்பட்ட விளக்கமளிக்கப்பட்டது.


5. இயக்க உதவி மையம்:

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் உதவி மைய எண்ணான 7667-100-100 ற்கு கடந்த டிசம்பர் மாதத்தில் உள்ள வேலை நாட்களில் மட்டும் பொதுமக்களிடமிருந்து 504 உதவி அழைப்புகள் பெறப்பட்டு மக்கள் கோரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பட்டா மாற்றம், பத்திரப்பதிவு, தகவல் பெறும் உரிமை சட்டம், வாரிசு சான்றிதழ், கிராம வரைபடம், மருத்துவ காப்பீடு அட்டை உட்பட பல அரசு சேவைகள் குறித்த கேள்விகளுக்கு தேவையான விளக்கமளிக்கப்பட்டது.


6. இயக்க உறுப்பினர்கள் சந்திப்பு:

இயக்க உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் இடையேயான இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக வாடிப்பட்டி, கள்ளக்குறிச்சி, மரக்காணம் மற்றும் விழுப்புரம் ஆகிய ஒன்றியங்களில் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. மற்ற ஒன்றியங்களுக்கான கூட்டம் வரும் நாட்களில் நடத்த ஏற்பாடாகி வருகிறது.


7. ஊடகத்தில் நம் இயக்கம்:

· தமிழக டாஸ்மாக் பார் திறப்பு குறித்து திரு.செந்தில் ஆறுமுகம் – புதிய தலைமுறை

· தமிழக அரசு மீது எதிர்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்து திரு.சிவ இளங்கோ – சத்தியம் தொலைக்காட்சி

· பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு குறித்து செல்வி.ஜெயந்தி – ஜெயா பிளஸ்

· திமுக கிராம சபைக்கு தமிழக அரசு தடை – திரு.செந்தில் ஆறுமுகம் – News 7 தொலைக்காட்சி

· அதிமுக மீது திமுக அளித்த ஊழல் பட்டியல் குறித்து – திரு.செந்தில் ஆறுமுகம் – தந்தி தொலைக்காட்சி

· கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் குறித்து திரு.செந்தில் ஆறுமுகம் – தந்தி தொலைக்காட்சி

· புதிய வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து திரு.சிவ இளங்கோ - தந்தி தொலைக்காட்சி

· தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த போவது அதிமுக அரசின் சாதனைகளா ஊழல்களா குறித்து திரு.சிவ இளங்கோ – News 7 தொலைக்காட்சி

· அரசின் அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள் குறித்து திரு.செந்தில் ஆறுமுகம் – ஜெயா பிளஸ் தொலைக்காட்சி

· கொரொனா விழிப்புணர்வு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து – திரு.சுரேஷ் – கோகுலம் கதிரில் சிறப்பு கட்டுரை.

· இலஞ்ச ஒழிப்புத் துறை பல் இல்லாத ஒன்றாக பரிதாபமாக இருக்கிறது – திரு.செந்தில் ஆறுமுகம் – தினகரன் சிறப்பு கட்டுரை

· கிராம சபை குறித்த விழிப்புணர்வு கட்டுரை - https://www.patrikai.com/what-is-grama-sabha-village-council-when-should-it-be-conducted-what-is-its-authority/

· ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து திரு.செந்தில் ஆறுமுகம் - https://www.galatta.com/tamil-mukamum-muzhakkamum/one-nation-one-poll/

· வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க இலஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரி கைது குறித்து - https://www.maalaimalar.com/news/district/2020/12/22075128/2190679/Tamil-News-Perumbakkam-near-Electricity-officer-arrested.vpf & https://www.polimernews.com/dnews/131795


8. வரவு செலவு அறிக்கை:

2013 இல் சட்ட பஞ்சாயத்து இயக்கம் துவங்கிய போது, மாதந்தோறும் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவது என்று அறிவித்து இருந்தோம். அதனை, இது நாள் வரை கடைப்பிடித்து வருகிறோம் என்பது நீங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக இயக்கத்தின் 85 வது மாத அறிக்கையை(டிசம்பர் 2020) சமர்பிப்பதில் மகிழ்கிறோம்.

இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு நிதி உதவி அளித்து, தொடர்ந்து ஆதரித்து வரும் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி.

நன்கொடையளிக்க: donate.sattam.org/

இயக்கத்தில் உறுப்பினராக இணைய: http://bit.ly/2020spimember

உறுப்பினர் சந்த தொகை அளிக்க: https://www.instamojo.com/@sattapanchayat

தொடர்புக்கு: sattapanchayat@gmail.com & 87545 80269

இயக்க முகநூல்: https://www.facebook.com/sattapanchayath