சட்ட பஞ்சாயத்து இயக்கம்

அரசு நிர்வாகம்: இலஞ்ச-ஊழல் இல்லாமலும் - இருப்பதே தெரியாமலும் இயங்கும் விரைவான, வெளிப்படையான, மக்கள் சேவகனாக இருக்கும் அரசு நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல்; குடிமக்கள் விழிப்புணர்வு: ஓட்டுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள், கடமைகள், சட்டங்கள் பற்றிய புரிதலை விதைத்து அனைத்து குடிமக்களிடம் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்; அனைவருக்கும் வளர்ச்சி: கல்வி, மருத்துவம், விவசாயம், தொழில், அடிப்படைக் கட்டமைப்புகள், சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவமளித்து வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் சென்றுசேர்வதை உறுதிப்படுத்தும் கொள்கைகளை முன்வைத்தல்; இந்த மாபெரும் இலட்சியங்களை நோக்கிய பயணமே "சட்ட பஞ்சாயத்து இயக்கம்".

ஒருவரியில் சொல்வதென்றால் "சட்டத்தின் ஆட்சி", "அனைவருக்கும் வளர்ச்சி" தரும் "நல்லாட்சியை" மலரச் செய்வதற்கான மக்கள் இயக்கமே சட்ட பஞ்சாயத்து இயக்கமாகும்.

டிசம்பர் 14, 2013 அன்று, சென்னையில் திரு.சகாயம்.ஐ.ஏ.எஸ்.அவர்களால் சட்ட பஞ்சாயத்து இயக்கமும், இயக்கத்தின் தொலைபேசி சேவை மையமும் துவங்கி வைக்கப்பட்டது.



இயக்கத்தின்நோக்கம்


துவக்க விழா

RTI தகவல் பெறும் சட்டம்


RTS சேவை பெறும் சட்டம்


செயல்திட்டங்கள்

இலஞ்ச-ஊழலுக்கு எதிராய்


நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும்…

  • இலஞ்சம் தராமல் அரசு சேவைகளைப் பெற, வழிகாட்ட தொலைபேசி உதவி மையம்

  • அரசு திட்டங்கள், மக்கள் உரிமைகள், மக்கள் சாசனம் குறித்து விளக்களித்தல்

  • பொதுமக்களுக்குத் தேவைப்படும் அரசு அலுவலக தொலைபேசி எண்கள், முகவரி தந்து உதவுதல்

  • ரேசன் கார்டு,ஓட்டுனர் உரிமம்,கல்விக்கடன் போன்ற அரசு சேவைகள் குறித்த கையேடுகள் வெளியிடுதல்

  • தகவல் உரிமைச் சட்ட விழிப்புணர்வு, பயிற்சி

  • சமூக அக்கறையுள்ள இளைஞர்களுக்கு தங்கள் ஊரில் இலஞ்ச-ஊழலுக்கு எதிராய் அறிவார்ந்த முறையில் செயல்பட பயிற்சி

  • அரசு நிர்வாக, அரசியல் நடைமுறை சீர்கேடுகள், அதைத் தடுக்கத் தேவைப்படும் சீர்திருத்தங்களை முன்வைத்தல்


மது ஒழிப்பு


  • மதுக்கடைகளை மூடக்கோரும் போராட்டங்கள்

  • உயிர் குடிக்கும் மதுவின் தீமைகளை விளக்கி பள்ளி,கல்லூரிகளில் விழிப்புணர்வுப் பணிகள்

  • மது ஒழிப்பு ஆர்வலர்கள், இயக்கங்களை ஒருங்கிணைத்தல்

  • மது ஒழிப்பு குறித்த கருத்தாக்கத்தை வலுப்படுத்த நூல்கள், ஒளிப்படங்கள் வெளியீடு

பங்கேற்பு

சட்ட பஞ்சாயத்து நோக்கங்கள், செயல்பாடுகளில் இணைந்து செயல்பட சமூக அக்கறையுள்ள உங்களை அழைக்கிறோம்…

எப்படி பங்கேற்பது

  • உறுப்பினராக இணைந்து இயக்கத்தின் நோக்கங்கள்,செயல்பாடுகளுக்கு தங்கள் ஆதரவளியுங்கள்

  • சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தொலைபேசி சேவை மையம் கணிப்பொறி தொழில்நுட்பம் நிறைந்த சிக்கலான பணியாகும். இதில் தங்கள் கணிப்பொறி நுட்பத்திறனை பங்களிக்கலாம்.

  • ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களை அறிமுகப்படுத்துங்கள்( எந்தத் துறையாக இருந்தாலும்). அவர்களின் அனுபவ அறிவு இயக்கத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

  • போதிய நிதியில்லாமல் இயக்கத்தின் மக்கள் சேவை தொடர முடியாது.தாங்கள் தரும், சிறு நிதியும் இயக்கத்திற்கு பெரும் உதவிதான்.


ஊழலுக்கெதிராய் கொதித்தெழும் இளைஞர்கள், மது அரக்கனிடமிருந்து குடும்பம் காக்கப்போராடும் பெண்கள் , பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரையும் அழைக்கிறோம்

வாருங்கள் !! மாற்றத்தில் பங்கெடுக்க… நல்லாட்சி வென்றெடுக்க…

எப்படி தொடங்குவது, எங்கு தொடங்குவது

என்பது குறித்து பேச அழையுங்கள்: 8754580274

நிறுவனர்கள்

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் துணைத்தலைவராக பொறியாளர்.திரு.மணிவாசகம் அவர்களும், துணை பொதுச்செயலாளராக வழக்கறிஞர் திரு. கமல் அசோக் அவர்களும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை புதிய வேகத்தில் சிறப்பாக எடுத்து சென்று மக்கள் பணி செய்ய புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் - November 1 - 2020



நிறுவனர் & முன்னாள் தலைவர்

சிவ.இளங்கோ, M.A(இதழியல்), M.A(அரசியல் அறிவியல்)

முன்னாள் பத்திரிகையாளர், திருவாரூர் மாவட்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்

தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர். 18 பதிப்புகள் கடந்த “தகவல் உரிமைச் சட்டம். பயன்படுத்துவது எப்படி”, பதிவுத்துறை-சீர்திருத்தங்கள் நூல்களின் ஆசிரியர்

கடந்த 7 ஆண்டுகளாக முழு நேர சமூகப் பணியாளர்

இலஞ்சம் – ஊழல், நல்லாட்சி குறித்து ஊடகங்களில் இவர் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும்

மக்கள் சக்தி இயக்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர்

நிறுவனர் & முன்னாள் பொதுச்செயலாளர்

செந்தில் ஆறுமுகம், MCA

தகவல் தொழில்நுட்ப பொறியாளர்(2005 வரை)

கடந்த 8 ஆண்டுகளாக முழுநேர சமூகப் பணியாளர்

நல்லாட்சி, மதுஒழிப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

மதுஒழிப்பிற்காக நடைபெறும் பெரும்பாலான போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பை தவறாது வழங்கி வருபவர்.

”என்றும் வற்றாத காவிரி – அரசியல்” நூல் ஆசிரியர். சமூகப் பிரச்னைகள் குறித்து பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளார் மக்கள் சக்தி இயக்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர்


செயலாளர்

ஜாகீர் உசேன்

இலஞ்சம் தடை செய்யப்பட்ட இடம்(Corruption Prohibited Zone) என்ற அறிவிப்புப் பலகையைத் தன் தொழில் நிறுவனத்தின் முன் தொங்கவிட்டு, நேர்மையோடு தொழில் செய்து வருபவர்

அன்னா ஹசாரேவின் “ஊழலுக்கு எதிரான இந்தியா(India Against Corruption) ஜன்லோக்பால் கொண்டுவரக்கோரி நடத்திய போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தவர். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்.

வாழும் கலை அமைப்பின்(Art of Living) பயிற்சி ஆசிரியர்

செயலாளர்

சாம் பொன்ராஜ்

கட்டிட வடிவமைப்பு வல்லுனர்

சமூக வலைத்தளம் மூலம் சமூக விழிப்புணர்வுப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருபவர்

அன்னா ஹசாரேவின் “ஊழலுக்கு எதிரான இந்தியா(India Against Corruption) ஜன்லோக்பால் கொண்டுவரக்கோரி நடத்திய போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தவர். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் M.Arch பயின்றவர்


செயலாளர்

பாலாஜி பிரேம்குமார்

தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை வல்லுனர்

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர சமூகப் பணியாளராக இருந்து வருகிறார்

பொதுநல அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் IAS பயிற்சிப் பள்ளியை நிர்வகிப்பவர், பயிற்சி அளிப்பவர்

அன்னா ஹசாரேவின் “ஊழலுக்கு எதிரான இந்தியா(India Against Corruption) ஜன்லோக்பால் கொண்டுவரக்கோரி நடத்திய போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தவர். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் B.E படித்தவர்

புகழ்பெற்ற காவல்துறை உயரதிகாரியான தன் தந்தையைப் போல் போராட்ட குணமிக்கவர்

செயலாளர்

சம்சு கனி

சிறுவயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குள்ளான இவர், படிப்படியாக தொழிலில் முன்னேறி இன்று ஏற்றுமதி நிறுவனமொன்றின் முக்கிய பங்குதாரராக இருக்கிறார்.

இலஞ்சம் தடை செய்யப்பட்ட இடம்(Corruption Prohibited Zone) என்ற அறிவிப்புப் பலகையைத் தன் தொழில் நிறுவனத்தின் முன் தொங்கவிட்டு, நேர்மையோடு தொழில் செய்து வருபவர்

அன்னா ஹசாரேவின் “ஊழலுக்கு எதிரான இந்தியா(India Against Corruption) ஜன்லோக்பால் கொண்டுவரக்கோரி நடத்திய போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தவர். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்