செயல்பாடுகள்

  1. ஜனநாயக நாட்டில் மக்களின் கடமைகள் என்ன, உரிமைகள் என்ன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்;(Empower Citizens)

  2. இலஞ்ச-ஊழலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துதல்; ( Expose Corruption )

  3. நல்லாட்சிக்கான கொள்கைகளை முன்வைத்தல்( Propose Solutions)

  4. மக்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றத்திலோ, களத்திலோ போராடி பிரச்னைகளைத் தீர்த்தல்(Protest and PIL)

இத்தகைய அணுகுமுறையோடு இயங்கும் இயக்கத்தின் கடந்த கால செயல்பாடுகள்... உங்கள் பார்வைக்கு...

07/02/2016: திருச்சியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

23/02/2016: மதுரையில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

23/02/2016: பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து புதிய சக்தி அணி தொடங்கப்பட்டது.

26/02/2016: சுகாதார வசதிகளை கணக்கெடுக்க திருச்சி ரயில் நிலைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

27/02/2016: கல்வித்துறை அதிகாரிகளின் தில்லுமுல்லு. பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர் நீதி கேட்டு செய்தியாளர் சந்திப்பு.

06/03/2016: ஈரோடு மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

07/04/2016: மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அதிமுக தலைமை அலுவலகம முன்பு கருப்பு துணி கட்டி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்பு.

15/04/2016: அடிப்படை சுகாதார வசதிகளை கணக்கெடுக்க ஈரோடு ரயில் நிலைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

21/04/2016: சேவை பெரும் உரிமை சட்டம் அமல்படுத்தக்கோரி இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கில், அச்சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லையென தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.

16/04/2016: ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கில், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லைஎனில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் நேரில் ஆஜராக வேண்டியது வருமென நீதிபதி கண்டித்தார்

16/04/2016: சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான பேச்சு, சட்டம் மற்றும் வருவாய் துறை தொடர்பான பயிற்சு வகுப்பு சென்னையில் நடைபெற்றது.

17/04/2016: சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

19/04/2016: புதிய சக்தி அணி வேட்பாளர்கள்பட்டியல் வெளியீடு.

30/04/2016: புதிய சக்தி அணி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

05/05/2016: புதிய சக்தி அணி சார்பாக போட்டியிடும் சிவச்சந்திரன் அவர்களை ஆதரித்து சென்னை துறைமுகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

05/05/2016: அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் முதல் மூன்று விஷயங்கள் என்ன என்பதை குறித்த கருத்துகணிப்பு தமிழ்நாடு முழுக்க 1508 பேரிடம் நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட்டது.

06/05/2016: புதிய சக்தி அணி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

06/05/2016: புதிய சக்தி அணி சார்பாக போட்டியிடும் நர்மதா நந்தகுமார் அவர்களை ஆதரித்து அம்பத்தூரில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

07/05/2016: புதிய சக்தி அணி சார்பாக போட்டியிடும் கணபதி சுரேஷ் அவர்களை ஆதரித்து மதுரவாயலில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

09/05/2016: மதுரை அவனியாபுரம் பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டறிக்கை கொடுக்கப்பட்டது.

09/05/2016: புதிய சக்தி அணி சார்பாக போட்டியிடும் திருசெந்தூரான் அவர்களை ஆதரித்து மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

10/05/2016: புதிய சக்தி அணி சார்பாக போட்டியிடும் முகமது அப்துல் ரகுமான் அவர்களை ஆதரித்து கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

11/05/2016: புதிய சக்தி அணி சார்பாக போட்டியிடும் லிங்கதுரை அவர்களை ஆதரித்து நான்குனேரியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது

11/05/2016: நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்கத்தின் சார்பாக பொதுச்செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் கலந்து கொண்டார்.

12/05/2016: புதிய சக்தி அணி சார்பாக போட்டியிடும் விஷ்ணு அவர்களை ஆதரித்து சைதாப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

13/05/2016: புதிய சக்தி அணி சார்பாக போட்டியிடும் ரீகன் அவர்களை ஆதரித்து திநகரில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

15/06/2016: தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையை MAY25 க்கு தள்ளிவைக்கவும், பணப்பட்டுவாடாவில் சிக்கிய வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டியும் இயக்கம்சார்பாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

17/06/2016: தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையை MAY25 க்கு தள்ளிவைக்கவும், பணப்பட்டுவாடாவில் சிக்கிய வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டியும் இயக்கம் சார்பாக பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

23/05/2016: டாஸ்மாக் கடைகள் நேரம் குறைக்கப்பட்டு 500 கடைகள் மூடப்பட்டதற்கு இயக்கம் வரவேற்பு. மேலும், புதிய கடைகள் திறக்க கூடாது, நேரம் குறைப்பை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை போன்ற கோரிக்கைள் முன்வைக்கப்பட்டது.

30/05/2016: நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் இயக்க தலைவர் சிவ இளங்கோ அவர்கள் வழக்கறிஞர்களால் தாக்கபட்டார்.

04/06/2016: சட்ட பஞ்சாயத்து இயக்கம் மீது முகநூலில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை ஆணையருக்கு புக்கர் அளிக்கப்பட்டது.

05/06/2016: சட்ட பஞ்சாயத்து இயக்க தென்மண்டல அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

12/06/2016: மரம் மதுரை அமைப்பினருடன் இனைந்து அவனியாபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

19/06/2016: நீதிமன்ற தாக்குதல் தொடர்பாக வழக்கு பதியாத போலீசாரை கண்டித்து இயக்க தலைவர் காவல் நிலையத்தில் உண்ணாவிரதம். விளைவாக FIR பதியப்பட்டது.

19/06/2016: நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரி நெல்லை, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

20/06/2016: நீதிமன்றத்தில் இயக்க தலைவர் சிவ இளங்கோ உட்கார வழக்கறிஞர்கள் மீண்டும் ஆட்சேபம். உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ளதாக அறிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

28/06/2016:மதுரைமாற்றுத்திரனாளிகள் நலத்துறையில் நடைபெற்ற நிதி முறைகேடு தொடர்பாக மதுரை ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது.

07/07/2016: இலஞ்சம் தராமல் அரசு சேவைகளை பெறுவது எப்படி என்ற தலைப்பில் துரைப்பாக்கத்தில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

13/07/2016: ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்யகோரி இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கில் ரயில்வே நிர்வாகம் செய்துள்ள பணிகள் குறித்த விவரங்களை சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்திற்கு நேரில் வந்து சமர்பித்தனர். மேலும், சென்னை ரயில் நிலையங்களில் தன்னார்வலர்களின் உதவியோடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

17/07/2016: சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் திருச்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

28/07/2016: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Cylinder Agency மீது நடவடிக்கை எடுக்கக்கோரி Hindustan Gas Agency தலைமை அலுவலகத்திற்கு புகார் அளிக்கபட்டது.

31/07/2016: மதுரை அவனியாபுரம் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழ அவனியாபுரத்தில் நடைபெற்றது.

06/08/2016: சுதந்திரம் அடிந்து 69 ஆண்டுகள் முடிவடைவதை முன்னிட்டு துரைப்பாக்கம் பகுதியில் 69 மரக்கன்றுகள் நாடும் விழா நடைபெற்றது.

08/08/2016: நெல்லை சாலைகளை முறையாக பரமரிக்கக்கோரி உடல் முழுவதும் கட்டுகளுடன் சென்று மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளிக்கபட்டது.

17/08/2016: ஓராண்டுகாலமாக சரியாக இயங்காத மினி பேருந்தை சிறை பிடித்து பொதுமக்களுடன் ஈரோட்டில் போராட்டம்.

31/08/2016: திருச்சி கொட்டப்பட்டு குளம் ஆக்கிரமிப்பை எதிர்த்து பொதுமக்களுடன் போராட்டம்.

02/09/2016: ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்யகோரி இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து பணிகளும் முடிந்து விட்டதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அரைகுறை பணிகளை ஆதரங்களுடன் இயக்கம் சமர்பித்தது. இதுபோல, அனைத்து ரயில் நிலையங்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

10/09/2016: காஸ் சிலிண்டர் ரசீது தொகைக்கு மேல் கூட்டுதல் தொகை கேட்கும்போது நாம் என்ன செய்ய வேண்டுமென விவரமடங்கிய விழிப்புணர்வு துண்டறிக்கை துரைபாக்கம் பகுதியில் விநியோகிக்கப்பட்டது.

18/09/2016: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

21/09/2016: தேர்தல் ஆணையம் செப்டம்பர் 1 ம தேதி வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதென இயக்கம் குற்றம் சாட்டியதோடு அதை ஆதாரத்துடன் நிரூபித்தது.

22/09/2016: அவனியாபுரம் பகுதியில் பொது விளையாட்டு மைதானம் வேண்டி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

30/11/2016: சென்னை ரயில் நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த கணக்கெடுப்பு லயோலா கல்லூரி மாணவர்களுடன் மேற்கொள்ள்ளப்பட்டது.

8/11/2016: ஈரோடு அரசு மருத்துவமனையில் உபயோகப்படுத்தப்பட்ட சாராய பாட்டில்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சாராய பாட்டில்களை மாலையாக அணிந்துசென்று மனு அளிக்கப்பட்டது. மனுவை ஏற்ற ஆட்சியர், மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தி மருத்துவமனையை சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டார்.

11/11/2016: ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்யகோரி இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவச் பாரத் வரியை ரயில் நிலைய கழிப்பறைகளை பராமரிக்க செலவு செய்ய வேண்டுமென இயக்கம் சார்பில் வாதாடப்பட்டது.

17/11/2016: இளைஞர்களுக்கான "உரிமைக்குரல்" பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்றது.

26/11/2016: ஈரோடு மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீரில் சாயக்கழிவுகள் கலந்து மாசுபட்டதால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதென ஜூனியர் விகடன் வெளியிட்ட கட்டுரையை சுட்டிக்காட்டி ஈரோடு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மருத்துவ முகாம் கேட்டு மனுஅளித்தனர். மனுவை ஏற்ற ஆட்சியர் 26/11/2016 அன்று இலவச மருத்துவ முகாமிற்கு உத்தரவிட்டார்.

29/11/2016: நெல்லை சாலையில் சுற்றித்திறிந்த மாடுகளை கோசாலைகளில் ஒப்படைக்க வேண்டுமென இயக்கம் கோரிக்கை. கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம் 142 மாடுகளை கோசாலையில் ஒப்படைத்தது.

09/12/2016: போயஸ் தோட்டத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற வேண்டுமென இயக்கம் கோரிக்கை.

15/12/2016: சென்னையின் உடனடி தேவையான மழை நீர் வடிகால் பணிகளை 2017 நவம்பர் மாதத்திற்குள் முடிக்க இயக்கம் கோரிக்கை விடுத்தது.

18/12/2016: சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா மதுரையில்.

2014

18/10/2014: சுதேசி மாத இதழ் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி விருதளித்தது. 12/10/2014: " சொத்துக்குவிப்பு வழக்கில் ஊழலுக்கு எதிராக உறுதியான தீர்ப்பளித்த நீதிபதி.குன்ஹாவிற்குப் பாராட்டுவிழா" – சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஏற்பாடு 10/10/2014: தமிழகத்தில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவரக்கோரி மெரினா கடற்கரையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்திய சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகள் கைது

06/09/2014: இருசக்கர வாகனத்தில் 7000 கிமீ பயணித்து சேவை பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்திய சமூக ஆர்வலர் ஜெகதீஸ்வரன், சட்ட பஞ்சாயத்து இயக்க செயலாளர் ஜெய்கணேஷ் ஆகியோருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது.

27/08/2014: தமிழக கவர்னரை நேரில் சந்தித்து சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகள் (செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ ஆகியோர்) மதுவிலக்கு, சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் கொண்டுவரக்கோரியும், செயல்படாத மாநிலத் தகவல் ஆணையரை நீக்கக்கோரியும் மனு கொடுத்தனர். 18/08/2014: சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சேவைகளைப் பாராட்டி இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திற்கு "அறச்செம்மல்" விருது வழங்கப்பட்டது.

27.04.2014 – சென்னை மற்றும் புறநகரிலுள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறைபாடு குறித்து ஆய்வு செய்ய கலந்தாலோசனைக் கூட்டம்

23.03.2014 - தகவல் உரிமைச் சட்ட பயிற்சி முகாம் 26.01.2014 - தகவல் உரிமைச் சட்ட பயிற்சி முகாம்

2013 டிசம்பர் 31, 2013: புத்தாண்டு இரவில் போக்குவரத்தை சீர்படுத்த போக்குவரத்துக் காவலர்களுக்கு தன்னார்வ உதவி

டிசம்பர் 14, 2013: தொலைபேசி சேவை மைய எண் திரு.சகாயம்.I.A.S.அவர்களால் துவங்கிவைக்கப்பட்டது ஆகஸ்ட் 25,2013: இயக்கத்தின் "தொலைபேசி சேவை மைய எண்" சோதனை ஓட்டத்திற்காகத் துவங்கி வைக்கப்பட்டது